வெள்ளி, 3 ஜூன், 2011

காலபைரவர்

காலபைரவர்


ஸ்ரீ பைரவர் வரலாறு

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.
படித்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார்.

சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி சந்திரன் கபால பைரவர் இந்திராணிசெவ்வாய் சண்ட பைரவர் கௌமாரிபுதன் உன்மத்த பைரவர் வராகிகுரு அசிதாங்க பைரவர் பிராமகி சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரிசனி க்ரோதனபைரவர் வைஷ்ணவிராகு சம்கார பைரவர் சண்டிகைகேது பீஷ்ண பைரவர் சாமுண்டி


நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்


நவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி
சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
சந்திரன் கபால பைரவர் இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் வராகி
குரு அசிதாங்க பைரவர் பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி


பைரவர் வழிபாடு கைமேல் பலன்
ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும் !!!!
தியானம்


ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .


பைரவ காயத்ரி:


ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !
சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!



பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் :

ஞாயிற்றுகிழமை
தள்ளிபோகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ராகு காலத்தில் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிசேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிபவர்கள் ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபாட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.


ஸ்ரீ கால பைரவர்
காசி கோவிலில் பைரவர் தான் ப்ரதாநமாதக்கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சநீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியபடுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார் . அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபாட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சநீஷ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.


அருள்மிகு காலபைரவர் திருக்கோயில்,கல்லுக்குறிக்கை-, கிருஷ்ணகிரி மாவட்டம்

மூலவர் : காலபைரவர்

ஊர் : கல்லுக்குறிக்கை

தீர்த்தம் : ஆகமம்/பூஜை

மாவட்டம் : கிருஷ்ணகிரி
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

மாநிலம் : Tamil Nadu

திருவிழா:

ஞாயிற்றுகிழமை ராகுகாலத்திலும், தேய்பிறை அஷ்டமியிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர்.


தல சிறப்பு:

இங்கு காலபைரவர் சிலைகள் இரண்டும் உள்ளன. நுழைவு வாயிலில் நந்தி இருக்கிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு காலபைரவர் திருக்கோயில்,கல்லுக்குறிக்கை-, கிருஷ்ணகிரி மாவட்டம்

பொது தகவல்:

பிரார்த்தனைநோய்கள், வறுமை, துன்பம் நீங்கி நன்மை உண்டாகவும், திருமணம் வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும், எதிரி பயம் இல்லாதிருக்க வேண்டியும் பைரவரிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பைரவருக்கு பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

சனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷம். கால பைரவருக்கு திரிசூலம் ஆயுதம். காசியில் காலபைரவரையும், சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் தரிசித்தால் சிறப்பு. கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர் பிரம்மனின் தலையை தன் நகத்தால் கிள்ளி எறிந்து தன் திருவிளையாடலை நடத்தியவர். கல்லுக்குறிக்கையில் ஆஞ்சநேயர் மலை, பைரவர் மலைக்கு இடையே படேதலாவு ஏரிக்கரையோரம் மலையடிவாரத்தில் ரம்மியமான சூழலில் காவல் தெய்வமான கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார்.

தல வரலாறு:

முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பழம்பெருமை மிக்க இந்த காலபைரவரை கம்மம் பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல் பட்டி, நெல்லூர், கொல்லப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர்.

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்கள்

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்கள்


1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:
”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்தர்ய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”
இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

3.வடுக பைரவ மூல மந்த்ரம்:
”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம் குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”
சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:
”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.
பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.

ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.

திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.

ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.