வியாழன், 31 மே, 2012

ஜெயா டிவியில் பைரவரின் பெருமைகள் நேரடி ஒளிபரப்பு...


ஜெயா டிவியில் பைரவரின் பெருமைகள் நேரடி ஒளிபரப்பு...



அண்ணாமலையில் இருந்து 12 கி.மீ.தூரத்தில் காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பெரியகுளம் என்னும் கிராமத்தில் காகா ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது.சித்தர்களில் மூத்தவர் காகபுஜண்டர் அவர்களின் ஆசியோடு கொல்லிமலை சித்தர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
தருமலிங்க சுவாமிகள் 1957 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்தூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்.இந்த கிராமத்திலிருக்கும்  ஸ்ரீதான் தோன்றி நாதர் கோவிலில் ஸ்ரீகாகபுஜண்டர் ஜோதி வடிவாய் இன்னும் சூட்சும தரிசனம் தந்தருளிவருகிறார்.
கடந்த ஆறுக்கும் மேற்பட்ட பிறவிகளில் தொடர்ந்து ஸ்ரீகாகபுஜண்டரின் அருளால் ஸ்ரீபைரவரை வழிபட்டு வந்தததால்,காகபுஜண்டர் ஜோதிவடிவில் காட்சியளிக்கும் இடையாத்தூரில்  ஸ்ரீதருமலிங்க சுவாமிகள் பிறந்து,கொல்லிமலையில் 48 நாட்கள் வீதம் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பைரவ பூஜைகளை விடாமல் செய்துவந்திருக்கிறார்.
சித்தர்களின் ஆசியாலும்,வழிகாட்டுதலாலும் திரு அண்ணாமலை அருகில் இருக்கும் பெரிய குளம் கிராமத்தில் ஸ்ரீகாகா ஆஸ்ரமத்தை நிறுவினார்.இங்கு பைரவர்களில் கலியுக தெய்வமாகிய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை சித்தர்கள் வழிமுறையில் நிறுவி,3.9.2010 அன்று குடமுழுக்கு செய்து திறந்துவைத்தார்.
சித்தர் வழிபட்ட பைரவர் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பைரவரைப் பற்றிய ஏராளமான ஆன்மீக ஆய்வுகள் செய்து மக்கள் நலனுக்காக பைரவ ரகசியம் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.இதற்காக  ஸ்ரீ காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகளுக்கு இந்த மானுட உலகமே நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
இப்பேர்ப்பட்ட சிறப்புடைய ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் பைரவரைப் பற்றி ஜெயா டிவியில் 1.6.2012 வெள்ளி முதல் 10.6.2012 சனிக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல்  6.30 வரை உரையாற்ற இருக்கிறார்.அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிப்போம்;பைரவர் வழிபாடு செய்யத் துவங்குவோம்;
 VLC Player இருந்தால் www.livetvchannelsfree.inஎன்னும் இணையதளத்தின் மூலமாக ஜெயா டிவியை பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக