
செவ்வாய், 24 மே, 2011
சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர்

திங்கள், 21 மார்ச், 2011
யோக பைரவர்
யோக பைரவர்
யோக பைரவர்
கையில் திரிசூலம், நிமிர்ந்த நாசி, உருட்டிய விழிகளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார் யோக பைரவர்.
இவருக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்தியக் கதை.
அதில் சின்னக் கிளைக் கதை.
கொலை, கொள்ளைகளில் கொடி கட்டிய பெயர் அவருக்கு. சாமர்த்தியமாக்க் கொள்ளையடிப்பதில் பிரசித்தி பெற்றவர், இங்கு வந்திருக்கிறார். பைரவசாமியைப் பார்த்திருக்கிறார். வணங்கியிருக்கிறார். கிணற்றில் கல் எறிந்த மாதிரி சலனம்.
மாறியிருக்கிறது மனம். அதன் இன்னொரு பக்கம் ஒளிந்திருந்த திறமையில் வெளிச்சம் பட்டுக் கவிதை பாடியிருக்கிறார். அப்படிக் கவிதையினால் அவர் காவியமே படைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி அவர் எழுதியதாகச் சொல்லப்படும் காவியம் – ராமாயணம்.
அந்தக் கவிஞர் வால்மீகியாம்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் இருக்கிற யோக பைரவருக்குப் பின்னணியில்தான் இந்தக் கதை. திருப்பத்தூரின் அந்தக் காலத்திய பெயர், வால்மீகிபுரம். பிறகு தமிழில் புத்தூராகி, முன்னால் ‘திரு’ என்கிற அடைமொழி சேர்ந்து திருப்பத்தூர்.
பெயரில் மட்டுமல்ல, பைரவரைப் பற்றிச் சொல்லப்படும் இன்னொரு கதையிலும் ‘ராமாயண வாசனை!’.
ராமர், சீதைக்குக் குழந்தை பிறந்தது இங்குதானாம். பெயிரிடுகிறார்கள் ‘லவன்’. அந்தச் சமயம் குழந்தையை அருகிலிருந்து கவனித்துக் கொண்டவர் வால்மீகி.
ஒரு சமயம், குடிநீர் எடுத்துவர வெளியே போகிறாள் சீதை. பக்கத்திலிருக்கிற முனிவரான வால்மீகியிடம் தொட்டிலில் கிடந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போகிறாள். போனதும் சிறிது நேரத்தில் கண்மூடி இருந்த முனிவரின் நிஷ்டையைக் கலைக்காமல் குழந்தையை மெதுவாகத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று விடுகிறாள் சீதை. சிறிது நேரம் கழித்துக் கண் விழிக்கிறார் வால்மீகி. குழந்தையைக் காணவில்லை. வருந்துகிறார். தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லைத் தொட்டிலில் போடுகிறார். உடனே அது குழந்தையாக உருவெடுக்கிறது. அச்சு அசலாக ‘லவன்’ போலவே இருக்கும் அந்தக் குழந்தை தொட்டிலில் கிடக்கும்போது சீதை உள்ளே நுழைகிறாள். அவளுக்கு அதிர்ச்சி. இன்னொரு லவனா? “இவனும் உன் குழந்தைதான்” என்கிறது அசரீரி. பிறகு இருவரையுமே வளர்க்கிறாள் சீதை.
புராண காலத்து ‘குளோனிங்...’ சீதையை நினைவுபடுத்துகிற வித்த்தில் இன்றும் திருப்பத்தூரிலுள்ள ஒரு குளத்தை சீதேவி – சீதளி என்று அழைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.
காசியிலிருந்த பைரவரை முருகன் இங்கு அழைத்து வந்த்தாக ஒரு கதை. காசியிலிருந்து வரும்போது தன்னுடன் கொன்றை மரக்கன்றையும் கொண்டுவந்து இங்கு நட்டாராம். ‘காசி வில்வம்’ என்கிற பெயருடன் இப்போதும் இருக்கிறது கொன்றைமரம்.
பாதங்கள் இரண்டையும் ஒருசேரப் பிணைத்து பெருவிரல்களால் பூமியை ஊன்றிய கோலத்தில் அமர்ந்திருக்கிறார் பைரவர். காதுகளில் சுருளான தோடு, கண்களில் அக்னி... இருப்பது யோக நிலையில்.
“ஆபத்து என்றால் பைரவர் உதவுவார்” என்கிற நம்பிக்கை இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு வந்து வணங்கி வழிபட்டால் பல சிக்கல்கள் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை.
ஒரு சமயம் சனீஸ்வரனுக்கே ஒரு சிக்கல். யமதர்மன் அவரை அலட்சியப்படுத்த, நொந்து போகிறார். தனது தாய் சாயாதேவியிடம் தன்னுடைய மனப்புகைச்சலைச் சொல்லிக் குமுறுகிறார். தாய், “நேரே போய் பைரவரைப் பார்” என்கிறார். பைரவரை தரிசிக்கிறார் சனீஸ்வரன். உடனே அவரது கிரக நிலையிலேயே மாற்றம். பலரைப் படுத்தும் சனீஸ்வரனுக்கே குரு என்றால், மற்றவர்கள்?
“சிவ... சிவ” என்கிற வாசகத்துடன் சின்னக் கோபுரம். உள்ளே நுழைந்த்தும் ஒரு புறம் சிவன், இன்னொருபுறம் முருகன். இன்னும் சற்றுத் தள்ளிப் போனால் பைரவர்.
பைரவருக்கு முன்னால் ஆடு, கோழி வெட்டுவதற்கென்றே கல்லால் ஆன தனிப்பீடம். பைரவருக்குப் பின்னால் ஒரு குளம். அதன் கரையில் மொட்டையடிக்கிறார்கள். காது குத்துகிறார்கள். சற்றுத் தள்ளி ஆடு, கோழி வெட்டத் தனியிடம். பொங்கல் வைக்கத் தனியிடம்.
எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள், பில்லி, சூன்யம் நீங்க அதற்கென்றே விசேஷ அர்ச்சனை செய்கிறார்கள். ஒன்பது முறை பூஜை செய்து தயிர் அன்னப் பாவாடை சாத்தி, தேங்காய் பழத்துடன் கும்பிட்டால் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதே மாதிரி பைரவருக்கு முன்னால் சிறு மிளகை சின்னத் துணியில் கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அர்ச்சனை செய்கிறார்கள். அப்படிச் செய்தால் இழந்த சொத்துக்களும், பொருட்களும் திரும்பவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பழங்காலத் தெய்வமான பைரவருக்கு மன்னர்கள் பலர் திருப்பணி செய்திருக்கிறார்கள். மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வீரபாண்டியன், மாறவர்மன், சுந்தர பாண்டியத் தேவர் என்று பைரவர் கோவிலைப் பராமரித்த மன்னர்களின் பட்டியல் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீண்டிருக்கிறது.
திருஞானசம்பந்தரிலிருந்து, திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் வரை பலர் பைரவரைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கோவிலில் ‘பைரவாஷ்டமி’ என்று தனி பூஜை பகல் 12 மணிக்கு நடக்கிறது.
வாகனம் எதுவுமில்லாமல் தரை தொட்டபடி உட்கார்ந்திருக்கும் பைரவர் இன்றும் பல சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குலதெய்வம்.
இன்னொரு ஆச்சர்யம், மற்ற மத்த்தினரையும் ஈர்க்கக்கூடிய மையமாக பைரவர் இப்போதும் இருப்பது. முஸ்லிம்களும் வருகிறார்கள். வந்து வாசனை திரவியங்களைப் படைத்து வழிபடுகிறார்கள். கிறிஸ்தவர்களும் வந்து வழிபடுகிறார்கள்.
சமயம் கடந்து அவர்களை ஒன்றிணைக்கிறது பைரவர் மீது அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கை
வியாழன், 17 மார்ச், 2011
இலிங்கோத்பவர் மூர்த்தி
இலிங்கோத்பவர் மூர்த்தி
இலிங்கோத்பவர் மூர்த்தி மகேஸ்வர வடிவங்களில் ஒன்றாகும்.வரலாற்றுக் கதை -
நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது.
அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர்.
நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று பூமிக்குள் சென்று அடி தேடலானார். பல காலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது.
பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வானவழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாயும் கூறியது. நான்முகன் தாழம்பூவைத் தன்பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார்.
திருமால் பலகாலும் முயன்றும் தாம் தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார். இருவரும் ஜோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து தம்பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.
தத்துவம் -
நான்முகன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது என்பதே லிங்கோத்பவர் உணர்த்தும் தத்துவம்.
திருமுறைகளில் இலிங்கோற்பவமூர்த்தி -
“அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற் கீழண்டமுற நின்றதுதான் என்னேடி
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ”
- மணிவாசகர்.
“அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரிய நீ சிறிய
என்னையாள விரும்பி என் மனம் புகுந்த
எளிமையை யென்றும் நான் மறக்கேன்
முன்னம்மால் அறியாவொருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந்தடந்தோள்
கன்னலே தேனே யமுதமே கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே”
- திருமாளிகைத்தேவர்
பைரவர் மூலமந்திரப் பலன்கள்
பைரவர் மூலமந்திரப் பலன்கள்

மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ஜீவநாடித்தொடர் கட்டுரையை எழுதி வந்த தெய்வத்திரு. அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாசன் அவர்களின் முழுமையான ஆசிகளுடன் அகத்தியர் ஜீவநாடியின் வழிகாட்டுதலின்படி எங்களுக்கு இறைத்திருவருளால் கிடைத்த போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு
வ. எண் | நட்சத்திரங்கள் | பைரவர் | அருள்தரும் தலம் |
1. | அசுவினி | ஞானபைரவர் | பேரூர் |
2. | பரணி | மகாபைரவர் | பெரிச்சியூர் |
3. | கார்த்திகை | அண்ணாமலை பைரவர் | திருவண்ணாமலை |
4. | ரோகிணி | பிரம்ம சிரகண்டீஸ்வரர் | திருக்கண்டியூர் |
5. | மிருகசிரிஷம் | க்ஷேத்திரபாலர் | க்ஷேத்ரபாலபுரம் |
6. | திருவாதிரை | வடுக பைரவர் | வடுகூர் |
7. | புனர்பூசம் | விஜய பைரவர் | பழனி |
8. | பூசம் | ஆஸின பைரவர் | ஸ்ரீவாஞ்சியம் |
9. | ஆயில்யம் | பாதாள பைரவர் | காளஹஸ்தி |
10. | மகம் | நர்த்தன பைரவர் | வேலூர் |
11. | பூரம் | பைரவர் | பட்டீஸ்வரம் |
12. | உத்திரம் | ஜடாமண்டல பைரவர் | சேரன்மகாதேவி |
13. | அஸ்தம் | யோகாசன பைரவர் | திருப்பத்தூர் |
14. | சித்திரை | சக்கரபைரவர் | தர்மபுரி |
15. | சுவாதி | ஜடாமுனி பைரவர் | பொற்பனைக்கோட்டை |
16. | விசாகம் | கோட்டை பைரவர் | திருமயம் |
17. | அனுஷம் | சொர்ண பைரவர் | சிதம்பரம் |
18. | கேட்டை | கதாயுத பைரவர் | சூரக்குடி |
19. | மூலம் | சட்டைநாதர் | சீர்காழி |
20. | பூராடம் | வீரபைரவர் | அவிநாசி, ஒழுகமங்கலம் |
21. | உத்திராடம் | முத்தலைவேல் வடுகர் | கரூர் |
22. | அவிட்டம் | பலிபீடமூர்த்தி | சீர்காழி, ஆறகழூர் |
23. | திருவோணம் | மார்த்தாண்ட பைரவர் | வயிரவன் பட்டி |
24. | சதயம் | சர்ப்ப பைரவர் | சங்கரன்கோவில் |
25. | பூரட்டாதி | அஷ்டபுஜபைரவர் | கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர் |
26. | உத்திரட்டாதி | வெண்கலஓசை பைரவர் | சேஞ்ஞலூர் |
27. | ரேவதி | சம்ஹார பைரவர் | தாத்தையாங்கார்பேட்டை |
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம: பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
புதன், 2 மார்ச், 2011
அட்ட வீரட்டத்தலங்கள்
திருமூலர் திருமந்திரத்தின் இரண்டாம் தந்திரத்தில் பதிவலியின் வீரட்டம் எட்டு எனும் தலைப்பில் எட்டு பாடல்கள் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம் எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் அட்ட வீரட்டத்தலங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
வீரட்டானங்கள்
பிரமன் தலையை அரிந்தது - நிகழ்ந்த இடம்: திருக்கண்டியூர் வீரட்டானம்.
அந்தகன் எனும் கொடிய அசுரனை அழித்தது - நிகழ்ந்த இடம்: திருக்கோவலூர் வீரட்டானம்.
திரிபுரங்களை எரித்தது - நிகழ்ந்த இடம்: திருவதிகை வீரட்டானம்.
தக்கனைத் தண்டித்தது - நிகழ்ந்த இடம்: திருப்பற்றியலூர் வீரட்டானம்.
சலந்தரன் என்ற அசுரனைக் கொன்றது - திருவிற்குடி வீரட்டானம்.
காகாசுரன் எனப்படும் யானை முகம் கொண்ட அசுரனின் தோலை உரித்தது - திருவழுவூர் வீரட்டானம்.
காமதேவனைக் காய்ந்தது - நிகழ்ந்த இடம்: திருக்குறுக்கை வீரட்டானம்.
எமதர்மனைக் காலால் எற்றியது - நிகழ்ந்த இடம்: திருக்கடவூர் வீரட்டானம்.
வியாழன், 10 பிப்ரவரி, 2011
ஸ்ரீ பைரவ வழிபாடு – 9
ஸ்ரீ பைரவரைத் துதிக்கும் சில ஸ்லோகங்கள்/துதிகள் இங்கே…
இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.
1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.
3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம்.
4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.
5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து அதன் படி பாராயணம் செய்யவும்.
இனி பாராயண மந்திரங்கள்
1. ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம் வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் . நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் . காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம் ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் . பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே .. புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் . வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம் கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் . ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் . ம்ருத்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம் த்ருஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் . அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம் காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் . நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. பல ச்ருதி .. காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம் க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் . ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம் ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம் இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம் ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..
2. ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
3. சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்
ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:
4.ஸ்ரீ பைரவ த்யானம்
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் தன்மை மிக்க ஸ்ரீ பைரவரை முறைப்படித் தொழுது வணங்க நம் தீரா வினைகள் அனைத்தும் தீரும்.
ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ!
ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்
ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம் வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் . நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் . காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம் ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் . பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே .. புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் . வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம் கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் . ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் . ம்ருத்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம் த்ருஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் . அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம் காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் . நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. பல ச்ருதி .. காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம் க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் . ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம் ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம் இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம் ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..