சிவபெருமான் எட்டு வகையான வீரச்செயல்களையும் நிகழ்த்திய தலங்கள்அட்ட வீரட்டத்தலங்கள் எனப்படும்.
திருமூலர் திருமந்திரத்தின் இரண்டாம் தந்திரத்தில் பதிவலியின் வீரட்டம் எட்டு எனும் தலைப்பில் எட்டு பாடல்கள் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம் எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் அட்ட வீரட்டத்தலங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
வீரட்டானங்கள்
பிரமன் தலையை அரிந்தது - நிகழ்ந்த இடம்: திருக்கண்டியூர் வீரட்டானம்.
அந்தகன் எனும் கொடிய அசுரனை அழித்தது - நிகழ்ந்த இடம்: திருக்கோவலூர் வீரட்டானம்.
திரிபுரங்களை எரித்தது - நிகழ்ந்த இடம்: திருவதிகை வீரட்டானம்.
தக்கனைத் தண்டித்தது - நிகழ்ந்த இடம்: திருப்பற்றியலூர் வீரட்டானம்.
சலந்தரன் என்ற அசுரனைக் கொன்றது - திருவிற்குடி வீரட்டானம்.
காகாசுரன் எனப்படும் யானை முகம் கொண்ட அசுரனின் தோலை உரித்தது - திருவழுவூர் வீரட்டானம்.
காமதேவனைக் காய்ந்தது - நிகழ்ந்த இடம்: திருக்குறுக்கை வீரட்டானம்.
எமதர்மனைக் காலால் எற்றியது - நிகழ்ந்த இடம்: திருக்கடவூர் வீரட்டானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக