பைரவர்
திருநெல்வேலி மாவட்டம் பன்பொழி அருகே அமைந்துள்ளது, திருமலைக் கோவில் என்னும் திருத்தலம். இங்கு முருகப் பெருமான் கோவில் கொண்டுள்ளார். பொதுவாக, பைரவர் சன்னதியில் பைரவருக்கு வாகனமாக நாய் இருக்கும். ஆனால், இந்த திருத் தலத்தில், நாய் வாகனம் இன்றி காட்சி தருகிறார் பைரவர். தேய்பிறை அஷ்டமி நாளில் இவரை வழிபட்டால், எண்ணிய நற்காரியங்கள் உடனே நிறைவேறும் என்கிறார்கள்.
மேலும் பரவர் சனீஸ்வரனுக்கு ஆசிரியர். ஆகவே பைரவரை வழிபட்டால் சனியின் அல்லல்கள் அகலும் என்பதால் பைரவர் வழிபாடு இன்னும் சிறப்பு பெறுகிறது .
பைரவரை வழிபட சில சிறப்பு ஸ்தோத்திரங்கள்௪
சில முக்கிய பைரவர் ஸ்தோத்திரங்கள்:
1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது
இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.
2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:
”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”
இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.
3.வடுக பைரவ மூல மந்த்ரம்:
”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்
குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”
சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.
4.பைரவ காயத்ரி 1:
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க௪
பைரவர் காயத்ரி 2:
”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.
பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.
ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.
திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக