திங்கள், 26 செப்டம்பர், 2011
அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில்
சிவன் பூஜித்த கோவில்
ஆதியிலேயே இறைவன் இறைவி பராசக்தியானவளை மதுரையிலே மலையத்வஜ பாண்டியன் மகளாக அக்கினி குண்டத்திலே அவதரிக்கச் செய்தார்.
`தேவி மும்முலை தடாதகை' என்கிற பெயருடன்
ஆய கலைகள் 64 நான்கினையும் தேர்ச்சியுடன் கற்று
திக்விஜயம் செய்து இறுதியாக கைலாய மலையில் நந்தி மற்றும் பூத கணங்களை வென்று
இறைவனை பாத்திரமாத்திரத்திலேயே அகந்தை அழிந்து
தன் கணவர் இவரே என்று உணர்ந்து
மதுரையிலே திருமணக்கோலம் பூண்டு வர வேண்டுகிறாள்.
இறைவன் சோமசுந்தர பாண்டியர் என்கிற பெயருடன்
மதுரையிலே மாப்பிள்ளை கோலம்பூண்டு
எல்லாம் வல்ல சக்தி அம்பிகை மீனாட்சியை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமண கோலத்திலேயே தன் ஆன்மாவினை நடுவூர் என்கிற மதுரையம்பதிலேயே ஆலயம் அமைத்து சிவபூஜை செய்கிறார்.
அவர் ஆத்மார்த்த பூஜை செய்த சிவ ஆலயமே மதுரை
`இம்மையிலும் நன்மை தருவார்' ஆலயம் ஆகும்.
மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி உள்ளார்.
சிவனின் அம்சமாகிய பைரவரின் வடுகர் என்றும் சட்டநாதர் என்றும் ஆபதூதாரணர் என்றும் அழைக்கின்றார்கள்.
ஸ்ரீ கால பைரவர்;
சகல பிணிகளுக்கும் மனபயம், புத்தி தடுமாற்றம், ஊழ்வினை துன்பம்,
கடன் தொல்லைகள், தாமதமான செயல்பாடுகளுக்கும் விமோசனம் அளிக்கும் கண்கண்ட தெய்வம்.
இவரே கதி என சரணடையும் எல்லா பக்தர்களையும் இவர் நீடுழி வாழ வைத்துள்ளார்.
காலபைரவருக்கு இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும்
மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் விசேஷ பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தட்சிணாமூர்த்தி :
இந்த கோவிலில் சிவனின் அம்சமாகிய தட்சிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் விசேஷ வழிபாடுகள், கூட்டு பிரார்த்தனைகள் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த கோவிலில் செய்ய கூடிய சிவ வழிபாட்டில் அனைவரும் குருவினுடைய மந்திரங்களை சிவாச்சாரியார் சொல்ல,
அதை அவ்வாறே பக்தர்களும் திருப்பி சொல்லி வழிபாடு செய்வது விசேஷ அம்சமாகும்.
சகல பிணிகளையும் நீக்க வல்ல ஜ்வரஹர மகாலிங்கம் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அபிஷேகம் :
இவருக்கு பிரதி வாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்
பால், இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து,
அர்ச்சனை செய்யும் போது மிளகு கொண்டு சென்று அர்ச்சனை செய்தால் தேகஆரோக்கியம் பெற்றிடலாம்.
சகல பிணிகளுக்கும் இங்கு பூஜை செய்து தரக்கூடிய மிளகு மிக விசேஷமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேய்பிறை அஷ்டமி - பைரவர் வழிபாடு
காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து
நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை .
நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியல்:
19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை
18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை
17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை
15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை
14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை
14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை
பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்...
வடுக பைரவர்: பிரான்மலை
வடுக பைரவர்: பிரான்மலை

ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையே தற்போது பிரான் மலை என போற்றப்படுகின்றது.
இங்கு மங்கைபாகர் சன்னதி ஆகாய நிலையில் விளங்குகின்றது. இது மேல் பகுதியில் விளங்குகின்றது.
வடுகபைரவர், விநாயகர் மற்றும் தஷிணாமூர்த்தி சன்னதி பூமி என்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது ஆகாயநிலைக்குக் கீழே, பாதாள நிலைக்கு மேலே நடுத்தரமாகக் காணப்படுகின்றது.
அதன் கீழே கொடுங்குன்ற நாதர் சன்னதி காணப்படுகின்றது. இது பாதாள நிலை எனக் கூறலாம்.
இந்த நடுத்தரமான பூமி நிலையில், சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டவராக விளங்குகின்றார் இந்த வடுக பைரவர்.
வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. அதற்கேற்றால் போல் சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. நின்ற திருக்கோலம். அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மற்றொரு கதையும் உண்டு. முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப் படுத்தினானாம். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவராம்.
ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் உடனடியாகக் களைபவர் இந்த வடுக பைரவர். இவருக்குக் கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் உடனடியாகப் பலன் கிடைக்கும்.
அமைவிடம்:
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இது புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. மேலைச்சிவபுரி என்ற ஊருக்கு அருகில் இத்தலம் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊரிலிருந்தும், பொன்னமராவதியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
மலைக்கு மேலே, சிறு ஆலயமும், இஸ்லாமியப் பெரியவரின் தர்காவும் உள்ளது. ஏறுவதற்கு மிகவும் அரியமலை. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.
ஸ்ரீ மஹா பிரத்தியங்கரா அஷ்டகம்.
ஸ்ரீ மஹா பிரத்தியங்கரா அஷ்டகம்.

காப்பு
முக்கண்ணன் ஈன்ற முழு முதலே முத்தமிழே
பக்கலிலே உனக்கு வல்லபை-உச்சிஷ்ட
கணபதியே சோளிங்க நல்லூரிலே வாழும்
குணசீலக் குன்றாம் துணை
1. பல்லாயிரம்கண்னால் கருணை மழை பொழியும்
அதர்வணக் காளி நீயே
சொல்லாயிரத்தா லுன்னைத் துதித்திடவே மகிழும்
பரசிவா னந்தவடிவே
எல்லோரும் எப்போதும் ஏற்றங்கள் பலபெறவே
சோளிங்க நல்லூரில் வாழ்
நல்லவளே நாயகியே வல்வினைகள் தீர்க்கும்மெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
2. சின்னக் குழந்தை பிரகலாதனைக் காக்க (ச்)
சீறிய சிங்க வடிவாய் (ச்)
சொன்ன வண்ணமே தூணில் வெளிப்போந்த நரசிம்மன்
அசுரனை வதை உக்கிரம்
முன்னம் நீ சரபரின் இறக்கையாய் வந்தணைத்து (ச்)
சினம் தணிந்திட்ட தாயே
சன்னிதியால் சஞ்சலங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா.
3. மதிசூடி விரிசடையான் துணையாய்க் காத்யாயனீ
சாமுண்டா முண்ட மர்த்தினீ
துதிகாளி சாந்தா த்வரிதர வைஷ்ணவீ பத்ரா
கரு உருக் கொண்ட சூலி
அதிநீல ஆடையாளே பாச முண்ட சூலமுடன்
டமருக ஸர்ப்ப பாணியு நீ
கதியாகவே வந்து வல்வினைகள் தீர்க்கும் எங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா.
4. நெடுநாவில் உதிரம் சிந்தும் நெஞ்சில் நீள் கபால மாலை
மின்னல் உன்கண் ணாகுமே
படுத்தும் பில்லிசூன்யமகல ராஜசிம்ம வாஹினி
நீயே ஏகாந்த யோகினி
துடிப்பான செம்பூவும் படையலுக்குச் செம்பழமும்
ஏற்கும் பைரவ பத்தினியே
அடுத்துக் கெடுக்கும் வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
5. ஓராணி வேராய்விளங்கும் மந்திர பீஜமான
க்ஷம் அவளுக்கே உவப்பே
இருடியர் அங்கிரஸர் ப்ரத்தியங்கிரஸர் எனும்
இருமுனிவர் நாம வடிவே
திருப்பாதம் ஆணவத்தைச் சவமாக்கி மேல் நிற்கும்
தேவிஉபாசகர் காவல் நீ
உருவாகும் குரோதங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
6. பக்தர் மனங்குளிரப் பார்த்து அருள் சொரியும்
உன் கண்கள் ஈராயிரம்
கத்தும் கடலலையாய்க் கதறும்எம் குறை கேட்கும்
உன்செவிகள் ஈராயிரம்
புத்தி பிறழாமலே நாம் வாழவே உதவும்
உன் கைகள் ஈராயிரம்
சித்தமலம் அறுத்து வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
7. குண்டலினி சக்திதனை ஆக்ஞையிலே ஏற்றுவிக்கும்
அனந்தா வாக்தே வியும் நீ
கண்டார்க் கெல்லாம் களிப்பே ஆவரணப் பூசைதனில்
அனங்க மாலினி யும்நீயே
கொண்ட சஞ்சலம் பீதி ஆயாசம் யாவையுமே
நீக்கும் மாதா கௌலினீ
அண்டங்கள் அனைத்திலும் வல்வினைகள் தீர்க்கும்
எங்கள்அன்னையே ப்ரத்தியங்கிரா
8 சத்ருபய சங்கட சர்ப்பதோஷ நாஸினீ
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சித்த சுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய்
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா.
ஆக்கியவர்பழனிபால இரவிச்சந்திரன். நன்றி.
ப்ரத்தியங்கரதேவி மூல மந்திரம்
ஒம் அபராஜிதாய வித்மஹே
ப்ரத்தியங்கிராய தீமஹி
தன்னோ உக்கிர ப்ரசோதயாத்
அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்

சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்
ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்
ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்
யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.
செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்
செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.
புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்
புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.
குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி
ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்
குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.
சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்
சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.
சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி
ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்
சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.
ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ
ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்
ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.
கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; காளி ப்ரசோதயாத்
கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.
இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும்
வியாழன், 21 ஜூலை, 2011
பைரவர் மூலமந்திரப் பலன்கள்
மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ஜீவநாடித்தொடர் கட்டுரையை எழுதி வந்த தெய்வத்திரு. அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாசன் அவர்களின் முழுமையான ஆசிகளுடன் அகத்தியர் ஜீவநாடியின் வழிகாட்டுதலின்படி எங்களுக்கு இறைத்திருவருளால் கிடைத்த போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு
வ. எண் | நட்சத்திரங்கள் | பைரவர் | அருள்தரும் தலம் |
1. | அசுவினி | ஞானபைரவர் | பேரூர் |
2. | பரணி | மகாபைரவர் | பெரிச்சியூர் |
3. | கார்த்திகை | அண்ணாமலை பைரவர் | திருவண்ணாமலை |
4. | ரோகிணி | பிரம்ம சிரகண்டீஸ்வரர் | திருக்கண்டியூர் |
5. | மிருகசிரிஷம் | க்ஷேத்திரபாலர் | க்ஷேத்ரபாலபுரம் |
6. | திருவாதிரை | வடுக பைரவர் | வடுகூர் |
7. | புனர்பூசம் | விஜய பைரவர் | பழனி |
8. | பூசம் | ஆஸின பைரவர் | ஸ்ரீவாஞ்சியம் |
9. | ஆயில்யம் | பாதாள பைரவர் | காளஹஸ்தி |
10. | மகம் | நர்த்தன பைரவர் | வேலூர் |
11. | பூரம் | பைரவர் | பட்டீஸ்வரம் |
12. | உத்திரம் | ஜடாமண்டல பைரவர் | சேரன்மகாதேவி |
13. | அஸ்தம் | யோகாசன பைரவர் | திருப்பத்தூர் |
14. | சித்திரை | சக்கரபைரவர் | தர்மபுரி |
15. | சுவாதி | ஜடாமுனி பைரவர் | பொற்பனைக்கோட்டை |
16. | விசாகம் | கோட்டை பைரவர் | திருமயம் |
17. | அனுஷம் | சொர்ண பைரவர் | சிதம்பரம் |
18. | கேட்டை | கதாயுத பைரவர் | சூரக்குடி டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை |
19. | மூலம் | சட்டைநாதர் | சீர்காழி |
20. | பூராடம் | வீரபைரவர் | அவிநாசி, ஒழுகமங்கலம் |
21. | உத்திராடம் | முத்தலைவேல் வடுகர் | கரூர் |
22. | அவிட்டம் | பலிபீடமூர்த்தி | சீர்காழி, ஆறகழூர் (அஷ்டபைரவ பலிபீடம்) |
23. | திருவோணம் | மார்த்தாண்ட பைரவர் | வயிரவன் பட்டி |
24. | சதயம் | சர்ப்ப பைரவர் | சங்கரன்கோவில் |
25. | பூரட்டாதி | அஷ்டபுஜபைரவர் | கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர் |
26. | உத்திரட்டாதி | வெண்கலஓசை பைரவர் | சேஞ்ஞலூர் |
27. | ரேவதி | சம்ஹார பைரவர் | தாத்தையாங்கார்பேட்டை |
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:
பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு…..
ஸ்ரீ ஜெயதுர்கா நெய் ஸ்டோர்
எண். 54, பரிபூரண விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை – 4. செல் : 98841 15342,